க்விக் காமர்ஸ் வருகையால் சில்லரை வணிகம் பாதிப்பு
புதுடில்லி:'க்விக் காமர்ஸ்' எனப்படும் விரைவான வர்த்தகம் அதிகரித்து வருவதால், நகர்ப்புறங்களில் உள்ள சில்லரை விற்பனையகங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கான விற்பனையில் 52 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக, சில்லரை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய வர்த்தகத்தால், நகர்ப்புறங்களில் உள்ள சில்லரை விற்பனையகங்களில் உணவு, பானங்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்களின் விற்பனை கணிசமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் விற்பனையாளர்கள் சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இருப்பினும், குழந்தை கள் பராமரிப்பு, ஆரோக்கியம் சார்ந்த முக்கிய துறைகளில் பாதிப்புகள் குறைவாகவே உள்ளன. அதுமட்டுமின்றி, இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இந்த விரைவு வர்த்தகத்தினால் எவ்வித பாதிப்புமின்றி, பாரம்பரிய சில்லரை விற்பனை வலுவாக உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.