உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பழங்குடியினர் சுயதொழில் துவங்க ரூ.100 கோடியில் கடன் உதவி திட்டம்

பழங்குடியினர் சுயதொழில் துவங்க ரூ.100 கோடியில் கடன் உதவி திட்டம்

சென்னை:பழங்குடியின மக்கள் சுயதொழில் துவங்க, கடனுதவி வழங்குவதற்கு, அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே, மாவட்ட தொழில் மையங்கள் வாயிலாக, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை 700 சிறப்பு முகாம்களை நடத்த உள்ளது. தமிழகத்தில், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நீலகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, திருப்பத்துார், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட, 18 மாவட்டங்களில், 7.94 லட்சம் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், மூங்கிலை பயன்படுத்தி கூடை, பாய் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கின்றனர். தேன், சிறுதானியங்கள் மற்றும் பல்வேறு மூலிகைகளையும் விற்கின்றனர். சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சுயதொழில் துவங்க, அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது. தொழில் துவங்குவதற்கான திட்ட செலவில், 35 சதவீதம் அதிகபட்சம், 1.50 கோடி ரூபாய் வரை மூலதன மானியமும், ஆறு சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில், கடன் பெறும் மொத்த பயனாளிகளில் பழங்குடியின மக்களின் பங்கு, ஆறு சதவீதம் மட்டுமே உள்ளது. எனவே, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு கடன் முகாம் நடத்த, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழங்குடியின மக்கள் கடன் பெற சிரமப்படுகின்றனர். எனவே, தமிழக அரசின் கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 100 கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் முகாம், மாவட்ட தொழில் மையங்கள் வாயிலாக நடத்தப்படும். இதில் அதிகாரிகள், வங்கியாளர்கள் பங்கேற்பர். அம்பேத்கர் திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டம், கலைஞர் கைவினை திட்டம் உள்ளிட்ட சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 1.25 லட்சம் பழங்குடியினரை அடையும் வகையில், 700 முகாம்கள் நடத்தப்படும். ஒரு முகாமிற்கு, 25,000 ரூபாய் என, 700 முகாம்கள் நடத்த, 1.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி