உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னையில் கடல் உணவு கண்காட்சி ஜூலை 1 முதல் 3 நாட்கள் நடக்கிறது

சென்னையில் கடல் உணவு கண்காட்சி ஜூலை 1 முதல் 3 நாட்கள் நடக்கிறது

புதுடில்லி:கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 'பாரத் கடல் உணவு கண்காட்சி' வருகிற ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளதாக, ஆணையத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மீன் வளர்ப்பில் முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்காட்சி நடத்தப்பட உள்ளது. கடல் உணவு ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், விவசாயிகள், உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுடன், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறை கண்டுபிடிப்புகளை பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்புகளை, இக்கண்காட்சி ஏற்படுத்தி தரும்.மேலும், அனைத்து பங்குதாரர்களும் மீன் வளர்ப்பு மற்றும் கடல் உணவு துறையின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்து, வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும், இத்துறையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த புதுப்பிப்பையும் பெறுவதற்குமான வாய்ப்புகளை வழங்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை