எஸ்.இ.ஆர்.சி., - என்.டி.பி.சி., ஒப்பந்தம்
சென்னை:சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் என்.டி.பி.சி., எனப்படும் தேசிய அனல் மின் கழகம் இடையே, கட்டுமான திட்டங்களை ஆய்வு செய்வதற்கு சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.ஒப்பந்தத்தில், சி.எஸ். ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., இயக்குனர் ஆனந்தவள்ளி, என்.டி.பி.சி., உதவி பொது மேலாளர் நாகேஷ்கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தம் வாயிலாக, என்.டி.பி.சி.,யின் அனல் மின் நிலையம் உள்ளிட்ட கட்டுமான திட்டங்களை, எஸ்.இ.ஆர்.சி., ஆய்வு செய்யும்.