உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சேவைகள் துறை வளர்ச்சி 9 மாதங்களில் இல்லாத சரிவு

சேவைகள் துறை வளர்ச்சி 9 மாதங்களில் இல்லாத சரிவு

புதுடில்லி:தேவைகள் குறைந்ததன் காரணமாக, நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் சரிந்துள்ளது.எச்.எஸ்.பி.சி., வங்கி, சேவைகள் துறையைச் சேர்ந்த 400 நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கான தரவுகளை, 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம் திரட்டுகிறது.அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 60.90 புள்ளிகளாக இருந்த சேவைகள் துறையின் வளர்ச்சி, செப்டம்பரில் 57.70 புள்ளிகளாக சரிந்துள்ளது. 50 புள்ளிகளுக்கு கூடுதலாக பதிவாகியுள்ளது வளர்ச்சியையே குறிக்கும் என்றாலும், வளர்ச்சியின் வேகம் சரிந்துள்ளது. கடந்தஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின், இதுவே குறைந்தபட்ச வளர்ச்சியாகும். சேவைகள் துறையின் வளர்ச்சி, நடப்பாண்டில் 60 புள்ளிகளுக்கு கீழே பதிவாகியுள்ளது இதுவே முதல்முறை. புதிய ஆர்டர்கள் குறைந்தது; போட்டித் தன்மை அதிகரித்தது; விலை உயர்வு ஆகியவையே வளர்ச்சி குறைய காரணமாகும். கடந்த மாதம் புதிய பணியமர்த்தல்கள், உள்ளீட்டு பொருட்களின் பணவீக்கம் அதிகரித்தபோதும், நிறுவனங்களின் விற்பனை விலை லேசான உயர்வையே கண்டன. தயாரிப்பு, சேவைகள் துறைகளின் வளர்ச்சியும் குறைந்ததால், கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 58.30 புள்ளிகளாக சரிந்துள்ளது. இது ஆகஸ்டில் 60.70 புள்ளிகளாக இருந்தது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை