உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சீத்தாப்பழம் விளைச்சல் 80% சரிந்தது

சீத்தாப்பழம் விளைச்சல் 80% சரிந்தது

சென்னை: மழை பற்றாக்குறையால், தமிழகத்தில்,சீத்தாப்பழ விளைச்சல் 80 சதவீதம் சரிந்துள்ளதாகவும்; அறுவடையும் தாமதம் ஆவதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, கிருஷ்ணகிரியை சேர்ந்த உற்பத்தியாளர்கள் கூறுகையில், “வழக்கமாக ஜூலையில் பிஞ்சு பிடித்து, ஐப்பசி மாத தொடக்கத்திலேயே சீத்தாப்பழங்கள் விளைச்சலுக்கு வந்துவிடும். இந்தாண்டு இன்னும் விளைச்சலுக்கே வரவில்லை. தோட்டம், காடுகளில் உள்ள மரங்களிலும் போதுமான காய்களில்லை. கிட்டத்தட்ட 80 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது. ‘‘கிருஷ்ணகிரி பகுதியில் விளையும் சீத்தாப்பழங்கள், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதுசார்ந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது” என்றனர். இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சக்திவேல் கூறியதாவது: நாட்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் ஹெக்டேரில் சீத் தாப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 50 சதவீத உற்பத்தி கொண்ட மஹா., மாநிலத்திலேயே 70 சதவீத உற்பத்தி குறைந்துள்ளது. கார்நாடகாவிலும் இதே நிலைதான். சீத்தாப்பழ விளைச்சலுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழை பெய்ய வேண்டும். அப்போது பெய்யவில்லையென்றால் பூக்கள் பிஞ்சுகளாக மாறி காய் பிடிப்பது பாதிக்கப்படும். தமிழகத்திலும் இந்த காரணத்தால் தான் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி