இறக்குமதி கார் விற்பனை ஸ்கோடா நிறுத்திவைப்பு
புதுடில்லி:இந்தியாவில், இறக்குமதி வாயிலாக கார்கள் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது, ஸ்கோடா நிறுவனம். சுங்கவரி விதிமுறைகள் தொடர்பான தெளிவு வரும் வரை, இதன் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்துஉள்ளது.அதே போன்று, வாகன எரிவாயு திறன் விதிமுறைகளான 'கபே 3' விதிமுறைகளை மத்திய அரசு முடிவு செய்யும் வரை, உள்நாட்டில் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் நிறுவனம், இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான வழக்கு, மும்பை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் வராமல் இருக்க, இந்நிறுவனம் இந்த நடவடிக்கைகளை எடுப்பதாக கூறப்படுகிறது.* 34 லட்சம் ரூபாய்க்கு மேல் விலையில் கார் இறக்குமதி செய்தால், இந்தியாவில் 110 சதவீதம் வரி* 34 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள கார்களுக்கு, 60 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது