உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சிறுதொழில்களின் கடன் தேவை மார்ச் காலாண்டில் 11 சதவிகிதம் உயர்வு கடன் வழங்குவதில் தமிழகம் முன்னிலை

சிறுதொழில்களின் கடன் தேவை மார்ச் காலாண்டில் 11 சதவிகிதம் உயர்வு கடன் வழங்குவதில் தமிழகம் முன்னிலை

புதுடில்லி:நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் கடன் தேவை 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால் மதிப்பின் அடிப்படையில் கடன் வழங்கல் 11 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 'சிட்பி' வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளின் பங்கு 42 சதவீதம்; பொதுத்துறை வங்கிகளின் பங்கு 39 சதவீதம்  கடந்த மார்ச் காலாண்டில் தனியார் வங்கிகளில் எம்.எஸ்.எம்.இ., கடன் தேவை 8 சதவீதம் அதிகரித்துள்ளது பொதுத்துறை வங்கிகளில் கடன் தேவை உயர்வு 15 சதவீதமாக இருந்தது தொகை அடிப்படையில், கடன் வழங்கல் மொத்தமாக 11 சதவீதம் சரிந்துள்ளது அமெரிக்க வரி விதிப்புகள், இஸ்ரேல் - ஹமாஸ், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட வெளிப்புற காரணிகளால், வங்கிகள் கடன் வழங்குவதில் அதிக எச்சரிக்கை உணர்வு 90 நாட்களுக்கு அதிகமாக கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை, 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.79 சதவீதமாக குறைந்துள்ளது கடன் பெற்றதில் 47 சதவீத நிறுவனங்கள் முதல் முறையாக கடன் வாங்கியுள்ளன மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம், உத்தர பிரதேசம், டில்லி ஆகிய மாநிலங்கள் மொத்த கடன் வழங்குவதில் 48 சதவீத பங்குடன் முன்னிலை வகிக்கின்றன தமிழகத்தில் தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை