இலங்கை காற்றாலை மின் உற்பத்தி
இலங்கையில் அமைக்க திட்டமிட்டப்பட்ட இரண்டு காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் இருந்து விலகு வதாக, 'அதானி கிரீன் எனர்ஜி' அறிவித்துள்ளது.
இலங்கை காற்றாலை மின் உற்பத்தி: அதானி கிரீன் எனர்ஜி விலகல் இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில், 6,364 கோடி ரூபாய் முதலீட்டில், மொத்தம் 484 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை வரும் 2026க்குள், அமைக்கும் பணியை முடிக்க திட்டமிட்டு இருந்தது. இதனிடையே, கடந்தாண்டு இந்த ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஏற்படுத்துமென அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், சர்ச்சைக்குரிய திட்டமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் புதிதாக பதவியேற்ற அனுரா குமார திசநாயகே தலைமையிலான அரசு, ஏற்கனவே ஒப்பந்தத்தில் நிர்ணயித்த மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பாக அதானி குழுமத்துடன் பேச்சு நடத்தி வந்த நிலையில், இத்திட்டத்தில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.இலங்கை காற்றாலை மின் உற்பத்தி
அதானி கிரீன் எனர்ஜி விலகல்