உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நிறுவனங்களை கையகப்படுத்த கடன் பாரத ஸ்டேட் வங்கி வழங்க திட்டம்

நிறுவனங்களை கையகப்படுத்த கடன் பாரத ஸ்டேட் வங்கி வழங்க திட்டம்

மும்பை: நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு நிதி வழங்க எஸ்.பி.ஐ., தயாராக இருப்பதாக, அதன் தலைவர் சி.எஸ்.ஷெட்டி தெரிவித்துள்ளார். உள்நாட்டில் நிறுவனங்கள் கையகப்படுத்தலுக்கு நிதி வழங்க, இந்திய வங்கிகளை அனுமதிக்க பரிசீலித்து வருவதாக அண்மையில் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. இந்நிலையில், மும்பையில் பேட்டியளித்த சி.எஸ்.ஷெட்டி தெரிவித்ததாவது: நிறுவனங்கள் கையகப்படுத்தலுக்கு நிதி வழங்கும் பிரிவில், தற்போது சில பன்னாட்டு வங்கிகள் முன்னணியில் உள்ளன. இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களை வாங்குவதற்கோ அல்லது கையகப்படுத்துவதற்கோ, எஸ்.பி.ஐ.,யின் முதலீட்டு வங்கி பிரிவான எஸ்.பி.ஐ., கேப்பிடல் சந்தை, ஏற்கனவே குறிப்பிடத்தக்க அனுபவம் பெற்றுள்ளது. ஆர்.பி.ஐ., விரைவில் இதற்கு அனுமதி அளிக்கும் என நம்புகிறேன். அதன்பின், வெளிநாட்டு வங்கிகளுடன் கைகோர்த்து நிறுவன கையகப்படுத்தலுக்கு கடன் வழங்கப்படும். வங்கியின் மொத்த மூலதனத்தில், ஒட்டுமொத்த கையகப்படுத்தல் கடன் 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற உச்சவரம்பை எதிர்த்து, ஆர்.பி.ஐ.,க்கு இந்திய வங்கிகள் சங்கம் கடிதம் எழுத உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை