உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உருக்கு துறையின் இரண்டாம் கட்ட பி.எல்.ஐ., திட்டம் இன்று அறிமுகம்

உருக்கு துறையின் இரண்டாம் கட்ட பி.எல்.ஐ., திட்டம் இன்று அறிமுகம்

புதுடில்லி:உருக்கு துறைக்கான இரண்டாம் சுற்று உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு இன்று துவக்கி வைக்க உள்ளதாக இத்துறைக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துஉள்ளது. இதுகுறித்து அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது: பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்திசார் ஊக்குவிப்புத் திட்டத்தின் இரண்டாம் சுற்றை, உருக்கு துறைக்கு, மத்திய அரசு இன்று துவக்கி வைக்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.உருக்கு துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும் மத்திய அரசு உருக்கு துறைக்கான பி.எல்.ஐ., திட்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்திஉள்ளது. இதன் வாயிலாக 27,106 கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது மற்றும் 79 லட்சம் டன் உருக்கு உற்பத்தியை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த 2024 நவம்பர் மாத நிலவரப்படி, நிறுவனங்கள் 18,300 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளதுடன், 8,660க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன.இதைத்தொடர்ந்து, தற்போது இத்துறைக்கான 'பி.எல்.ஐ., 1.1' என்ற மற்றொரு சுற்று பி.எல்.ஐ., திட்டத்தை, மத்திய உருக்கு மற்றும் கனரக தொழில்துறைக்கான அமைச்சர் குமார சாமியால் ஜன., 6ம் தேதியான இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !