உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எத்தனால் கொள்முதல் விலையை அதிகரிக்க அரசுக்கு வலியுறுத்தல் சர்க்கரை ஆலைகள் சங்கம் கோரிக்கை

எத்தனால் கொள்முதல் விலையை அதிகரிக்க அரசுக்கு வலியுறுத்தல் சர்க்கரை ஆலைகள் சங்கம் கோரிக்கை

புதுடில்லி:அதிகரித்து வரும் கரும்பு கொள்முதல் விலைக்கு ஏற்ப, எத்தனால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என, இந்தியா சர்க்கரை ஆலைகள் சங்கமான 'இஸ்மா' அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கம் தெரிவித்திருப்பதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில் கரும்புக்கான விலை, 11.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எத்தனாலுக்கான விலை உயர்த்தப்படவில்லை. கடந்த காலங்களில் கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படும் போது, எத்தனாலுக்கான விலையையும் அரசு திருத்தி வந்தது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக அவ்வாறு நடக்கவில்லை. எத்தனால் உற்பத்தி திறனுக்காக 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது எத்தனால் உற்பத்தி 850 கோடி லிட்டராக உள்ளது. ஆனால், கொள்முதல் விலை அதிகரிக்காததால், உற்பத்தி ஆலைகள் நிதி நெருக்கடிக்கு ஆளாகிவருகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளது.

2022- - 23 பருவம்

கரும்புக்கான விலை : ரூ.305/குவின்டால்எத்தனால் விலைகரும்பு சாறிலிருந்து : ரூ.65.61/லிட்டர் 'பி' மொலாசஸ் வாயிலாக : ரூ.60.73/லிட்டர் 'சி' மொலாசஸ் வாயிலாக : ரூ.49.41/லிட்டர்

ஏற்றத்தாழ்வு

மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு தற்போது 72 ரூபாய் விலை கிடைக்கும் நிலையில், கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு 65.61 ரூபாயே கிடைக்கிறது. இது, உற்பத்தி செலவை விட குறைவு. இது, எத்தனால் விலை நிர்ணயத்தில் பெரிய ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ