உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்கு முதலீட்டிற்கு ஏற்ற கால அளவு

பங்கு முதலீட்டிற்கு ஏற்ற கால அளவு

பங்கு சந்தையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதலீடு செய்திருந்தால், பெரும்பாலான நேரங்களில் முதலீடு பலன் மூன்று மடங்காக இருந்துள்ளது என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.பங்கு முதலீடு தொடர்பாக, ஏஸ் எம்.எப்., மற்றும் பண்ட்ஸ் இந்தியா மேற்கொண்ட ஆய்வு முடிவுகள், நீண்ட கால முதலீட்டின் அருமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. நிப்டி 50 டோட்டல் ரிட்டர்ன் இண்டக்ஸ் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, ஆறு முதல் ஏழு ஆண்டுகள் முதலீடு செய்திருந்தால், பெரும்பாலான நேரங்களில் 1 லட்சம் ரூபாய் முதலீடு இரு மடங்கு பலன் அளித்துள்ளதாக தெரிவிக்கிறது.முதலீடு காலம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் போது, பத்தில் எட்டு தருணங்களில் பலன் நான்கு மடங்காக இருப்பதாகவும் தெரிவிக்கிறது. பெரும்பாலும் ஏழு ஆண்டு கால அளவிலான முதலீடு 10 சதவீதத்திற்கு மேல் பலன் அளித்துஉள்ளது.பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் பற்றி கவலைப்படாமல், நீண்ட கால அடிப்படையில் முதலீட்டை தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதற்கு வலு சேர்க்கும் வகையில் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டும் போக்குகள் அமைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை