உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாட்டின் அன்னிய நேரடி முதலீட்டில் ரூ.31,280 கோடியை ஈர்த்த தமிழகம்

நாட்டின் அன்னிய நேரடி முதலீட்டில் ரூ.31,280 கோடியை ஈர்த்த தமிழகம்

புதுடில்லி,:கடந்த நிதியாண்டில், இந்தியா பெற்ற அன்னிய முதலீட்டில், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் 51 சதவீதத்தை பெற்றிருந்ததாக மத்திய தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், நாட்டின் மொத்த அன்னிய நேரடி முதலீடு, பங்கு முதலீடுகள், மறு முதலீடு வருவாய் மற்றும் பிற மூலதனங்கள் உள்ளிட்டவை வாயிலாக 14 சதவீதம் அதிகரித்து, 6.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும். முந்தைய 2023 - 24ம் நிதியாண்டில், இது 6.06 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.குறிப்பாக, இந்தியாவுக்கு கிடைத்த அன்னிய நேரடி முதலீட்டில், மஹாராஷ்டிரா மாநிலம் அதிகபட்சமாக 1.67 லட்சம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளது. இது, நாட்டின் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 31 சதவீதமாகும். இதேபோன்று, கர்நாடகாவும் 56,270 கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், தமிழகம் 31,280 கோடி ரூபாயை பெற்றுள்ளது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவுக்கு, அன்னிய நேரடி முதலீடுகள் கணிசமாக வர, அம்மாநிலங்களின் உள்கட்டமைப்பில் ஏற்பட்ட முன்னேற்றமே காரணம் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ