மேலும் செய்திகள்
பேச்சு, பேட்டி, அறிக்கை
27-Nov-2025
சென்னை: தமிழகத்தில், 'கிராமந்தோறும் புத்தொழில்' திட்டத்தின் கீழ், 100 கிராமங்களில் , புத்தொழில் நிறுவனங்களை உருவாக்க, தொழில் ஐடியா வைத்துள்ள இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்க, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. கிராமங்களில் வசிக்கும் இளைஞர்களிடம், வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டுதல் உட்பட பல்வேறு தொழில்கள் துவங்குவது தொடர்பான கருத்துருக்கள் உள்ளன. இருப்பினும், நிதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் தொழில் துவங்க சிரமப்படுகின்றனர். எனவே, கிராமந்தோறும் சிறந்த தொழில் ஐடியா வைத்திருப்பவர்களை கண்டறிந்து, புத்தொழில் நிறுவனம் துவக்குவதை ஊக்குவிக்க, 'கிராமந்தோறும் புத்தொழில்' திட்டத்தை, ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் துவக்கிஉள்ளது.
27-Nov-2025