உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பெண்கள் நடத்தும் சிறுதொழில்கள் தமிழகத்துக்கு இரண்டாம் இடம்

பெண்கள் நடத்தும் சிறுதொழில்கள் தமிழகத்துக்கு இரண்டாம் இடம்

சென்னை:மத்திய அரசின், 'உத்யம்' தளத்தில், தமிழகத்தில் இருந்து, 33 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதில், 6.21 லட்சம் நிறுவனங்கள், பெண்கள் தலைமையின் கீழ் செயல்படுகின்றன.நாடு முழுதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை முறைப்படுத்த, மத்திய அரசு, 'உத்யம்' சான்று வழங்குகிறது. இதற்கு அந்நிறுவனங்கள், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கீழ் உள்ள, 'உத்யம்' இணையதளத்தில், சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த சான்று வைத்துள்ள நிறுவனங்களுக்கு, வங்கி கடன்கள், மானிய சலுகை வழங்குவதில், முன்னுரிமை அளிக்கப்படுகிறது.கடந்த நவ., 25ம் தேதி நிலவரப்படி, நாடு முழுதும் இருந்து, 'உத்யம்' தளத்தில் பதிவு செய்துள்ள, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதில், 50.41 லட்சம் நிறுவனங்களுடன், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அடுத்து தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இருந்து, 30.33 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ