ஜெர்மனியின் பணியாளர் தேவையை தமிழகம் பூர்த்தி செய்யும்
ஜெர்மனியில் திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், இந்தியாவை நோக்கி ஜெர்மனி நிறுவனங்கள் அதிகளவில் கவனம் செலுத்துகின்றன. பொறியாளர்கள், ஐ.டி., வல்லுநர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி, மெகாட்ரானிக்ஸ் தொழில்நுட்ப வல்லுனர்கள், கருவி தயாரிப்பாளர்கள், எலக்ட்ரீஷியன்கள், கனரக வாகன ஓட்டுனர்கள் என பல்வேறு பிரிவுகளில் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். வலுவான கல்வி நிறுவனங்களையும், தொழிற்பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்புகளையும் கொண்டுள்ள தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள், இந்த தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க முடியும். – மைக்கேல் ஹாஸ்பர், ஜெர்மனி துணைத்தூதர், சென்னை