உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சீன ஆப்பிள் உதிரிபாக நிறுவனத்தை கையகப்படுத்தியது டாடா குழுமம்

சீன ஆப்பிள் உதிரிபாக நிறுவனத்தை கையகப்படுத்தியது டாடா குழுமம்

புதுடில்லி :டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் இன்ஜினியரிங் அண்டு ஆட்டோமேஷன் நிறுவனம், ஆப்பிள் ஐபோன் பாகங்கள் சப்ளையரான, சீனாவின் பிரிசிசியன் நிறுவனத்தின் இந்திய பிரிவை தன்வசப்படுத்தியுள்ளது. ஜஸ்ட்டெக் என்ற அந்நிறுவனத்தை 880 கோடி ரூபாய்க்கு டாடாவின் டைட்டன் இன்ஜினியரிங் அண்டு ஆட்டோமேஷன் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் விற்கப்படவுள்ள அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் இலக்கை வலுப்படுத்தும் வகையில் இந்த வர்த்தகம் உள்ளது. ஏற்கனவே, பெகட்ரான் என்ற நிறுவனத்தை வாங்கியதன் வாயிலாக, ஆப்பிள் ஐபோன் தயாரிப்பின் ஒரு பிரிவில் டாடா எலக்டிரானிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ள நிலையில், சீன நிறுவனத்தை டைட்டன் இன்ஜினியரிங் வாங்கிஉள்ளது. இதனால், ஐபோன் தயாரிப்பில் டாடாவின் பங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பரிவர்த்தனை, கடந்த ஆகஸ்டில் நிறைவடைந்து விட்டதாகவும் எச்.எஸ்.பி.சி., மற்றும் எச்.டி.எப்.சி. வங்கிகள் இதுதொடர்பான ஆலோசனைகளை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை தலைமையிடமாக கொண்டது ஜஸ்ட்டெக் பிரிசிசியன் நிறுவனம்  ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் 2008 முதல் முக்கிய உதிரிபாக வினியோகஸ்தராக உள்ளது  ஜஸ்ட்டெக் பிரிசிசியன் நிறுவனத்தின் இந்திய பிரிவு, 2019ல் துவங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை