ஆடம்பர கார்கள் இறக்குமதியில் 25 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
புதுடில்லி:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர கார்களின் மதிப்பை குறைத்து, சுங்க வரியை செலுத்தாமல், இறக்குமதியாளர்கள் 25 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.இதுகுறித்து நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரக ஆடம்பர கார்களின் உண்மையான விலையில் இருந்து 50 சதவீதம் அளவுக்கு, அதன் மதிப்பை குறைத்து காட்டி, சுங்க வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளது. இது தொடர்பான விசாரணையில், 30க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் இறக்குமதி செய்யப்பட்டது தெரிய வந்தது. இதன் வாயிலாக ஹைதராபாத், மும்பை மற்றும் புனே, ஆமதாபாத், பெங்களூரு, டில்லி ஆகிய நகரங்களைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள், 25 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துஉள்ளனர்.எட்டு ஆடம்பர கார்களை இறக்குமதி செய்து 7 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட ஹைதராபாதைச் சேர்ந்த முக்கிய இறக்குமதியாளரை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
கார் மாடல்கள்
* ஹம்மர் இவி, காடிலாக் எஸ்கலேட், ரோல்ஸ்-ராய்ஸ், லெக்சஸ், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் மற்றும் லிங்கன் நேவிகேட்டர் போன்ற சொகுசு கார் மாடல்களின் இறக்குமதியில் மோசடி நடைபெற்றுள்ளது.
ஆடம்பர கார் இறக்குமதியில் சுங்க வரி ஏய்ப்பு
* அமெரிக்கா, ஜப்பானில் இருந்து சொகுசு கார்கள் வாங்கப்படுகின்றன* இந்த கார்கள் அங்கிருந்து இலங்கை அல்லது துபாய்க்கு கொண்டு செல்லப்படுகின்றன* அங்கே காரை இடதுபக்க டிரைவிலிருந்து வலது பக்க டிரைவ்வாக மாற்றுவது உள்ளிட்ட மாற்றங்கள் செய்யப்படுகின்றன * இதன் பிறகு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன* எளிதாக வரி ஏய்ப்பு முடிந்து விற்பனைக்கு அனுப்பப்படுகின்றனஇறக்குமதி வரி விதிப்பு:* 2025 - -26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 40,000 டாலருக்கு மேல் விலை கொண்ட சொகுசு கார்களுக்கான இறக்குமதி வரி, முந்தைய 125% இருந்து 70% ஆக குறைக்கப்பட்டுள்ளது சுங்க வரியைத் தவிர, சரக்கு மற்றும் சேவை வரி, மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும் சாலை வரி போன்ற வரிகளும் விதிக்கப்படும்இறக்குமதி விதிமுறைகள்: * வலது பக்க டிரைவ் வாகனமாக இருக்க வேண்டும். சில விதி விலக்குகள் உண்டு* பயன்படுத்தப்பட்ட கார்கள் எனில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது* கொல்கட்டா, சென்னை, மும்பை ஆகிய துறைமுகங்கள் வாயிலான இறக்குமதிக்கு அனுமதி* இந்தியாவின் சாலை பாதுகாப்பு மற்றும் உமிழ்வு தரங்களுக்கு இணங்கியதாக இருக்க வேண்டும்
மோசடிகள் பல விதம்
1 மதிப்பை குறைத்தல் இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர கார்களின் மதிப்பை, உண்மையான விலையை விட குறைவாக காட்டுவது. இது செலுத்த வேண்டிய வரியை கணிசமாக குறைக்கிறது.2 போலி ஆவணங்கள் போலி ஆவணங்கள் வாயிலாக பயன்படுத்தப்படுகின்றன. காரின் மாடல், ஆண்டு, பயன்பாடு போன்றவை தவறாக காட்டப்படுகின்றன. கார்களை ''பயன்படுத்தப்பட்டவை'' அல்லது ''குறைந்த மதிப்பு மாடல்கள்'' என வகைப்படுத்தி, சுங்க வரி விகிதங்களை குறைக்க முயற்சிப்பது.3 வரிச் சலுகை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அல்லது குறிப்பிட்ட தொழில்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு இறக்குமதி உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்டு, இவை இறக்குமதி கார்களாக கருதப்படாமல் வரி விலக்கு பெறப்படுகிறது.4. மறு வகைப்படுத்தல் வணிக வாகனங்கள், பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் என தவறாக வகைப்படுத்தி வரியை குறைப்பது 5. மறைமுக இறக்குமதி முறையான சுங்க நடைமுறைகளை, துறைமுகங்களை தவிர்த்து, மறைமுகமாக மூன்றாம் நாடுகள் வழியாக இறக்குமதி செய்யப்படுவது 6. போலி இறக்குமதியாளர்கள் ஒருமுறை மட்டும் இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் நிறுவனங்கள், அதன் பிறகு மறைந்து, புதிய நிறுவனங்கள் வருகை7. லஞ்சம், சலுகைகள் லஞ்சம் அல்லது பிற சலுகைகள் வாயிலாக அதிகாரிகளை வளைத்து, முறைகேடான ஆவணங்களை அங்கீகரிக்கச் செய்வது