உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தரவு மையங்கள் வணிகத்தின் பங்குகளை விற்க டி.சி.எஸ்.,பேச்சு

தரவு மையங்கள் வணிகத்தின் பங்குகளை விற்க டி.சி.எஸ்.,பேச்சு

புதுடில்லி: தரவு மையம் தொடர்பான வணிகத்தின் பங்குகளை விற்பது தொடர்பாக பல்வேறு முதலீட்டு நிறுவனங்களுடன் டி.சி.எஸ்., பேச்சு நடத்தி வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் விரிவடைந்து வரும் நிலையில், தரவு மையங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், ஒரு கிகாவாட் திறன் கொண்ட தரவு மையத்தை அமைக்க இருப்பதாக டி.சி.எஸ்., அறிவித்திருந்தது. இதற்கு, அடுத்த 5 முதல் -6 ஆண்டுகள், 61,000 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமீர் செக்சாரியா தெரிவித்துள்ளதாவது: நாங்கள் பங்குதாரர்களை எதிர்ப்பார்த்துள்ளோம். தரவு மையம் வணிகத்துக்கான முதலீடு, டி.சி.எஸ்., நிறுவனத்திடம் இருந்து மட்டும் இருக்காது. இது கடன் மற்றும் பங்குகள் ஆகியவற்றின் கலவையாக இருக்கலாம். ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், பங்கு விற்பனை, அவற்றின் மதிப்பு ஆகியவை குறித்து இப்போதைக்கு கூற இயலாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை