உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டெலிகாம் நிறுவனங்கள் வருவாய் 12 சதவீதம் உயர்வு

டெலிகாம் நிறுவனங்கள் வருவாய் 12 சதவீதம் உயர்வு

புதுடில்லி:கடந்த மார்ச் காலாண்டில், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஏ.ஜி.ஆர்., எனும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய், 12.44 சதவீதம் அதிகரித்து 79,226 கோடி ரூபாயாக இருந்ததாக, தொலைத்தொடர்பு ஒழுங்முறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது. இதில் 29,464 கோடி ரூபாய் பங்குடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. எனினும், சதவீதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, 25.64 சதவீத வளர்ச்சியுடன், பார்தி ஏர்டெல் முன்னணி வகிக்கிறது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனங்களின் மொத்த வருவாய் 98,250 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் இருந்து தான், உரிமக் கட்டணம் மற்றும் அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணத்தை மத்திய அரசு வசூல் செய்து வருகிறது. கடந்த மார்ச் காலாண்டில், அரசின் உரிமக் கட்டண வருவாய் 12.46 சதவீதம் அதிகரித்து, 6,340 கோடி ரூபாயாகவும்; அலைக்கற்றை பயன்பாட்டு கட்டண வருவாய் 15.08 சதவீதம் அதிகரித்து, 1,000 கோடி ரூபாயாகவும் இருந்தது.

ஏ.ஜி.ஆர்., உயர காரணம்

 கடந்தாண்டு ஜூலையில் மொபைல் சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது இதனால், ஒரு வாடிக்கையாளரிடமிருந்து சராசரியாக வசூலிக்கப்படும் கட்டணம், 182.95 ரூபாயாக உயர்வு கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 19.16 சதவீதம் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை