உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்திய சிப் பொருத்திய டெலிகாம் சாதனம்

இந்திய சிப் பொருத்திய டெலிகாம் சாதனம்

புதுடில்லி:இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் பொருத்திய முதலாவது தொலைத்தொடர்பு சாதனத்துக்கு, தொலைத்தொடர்பு பொறியியல் மையம் சான்றளித்துள்ளது. இதை தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நாட்டின் செமிகண்டக்டர் பாதையில் இது பெரிய முன்னேற்றம் என்று தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு பொறியியல் மையத்தின் சான்று என்பது ஒரு பொருள் சிறப்பான செயல்பாடு மற்றும் தரநிலைகளை எட்டுகிறது என்பதற்கான மத்திய தொலைத்தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வ சான்றாகும். மேலும், இந்த சான்று, இந்திய சிப்களை வெளிநாட்டு தரத்துக்கு உயர்த்தியுள்ளது. இதன் வாயிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இவற்றை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை