உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆழியாறு மின் திட்டம் ஆலோசகருக்கு டெண்டர்

ஆழியாறு மின் திட்டம் ஆலோசகருக்கு டெண்டர்

சென்னை, : கோவையில், பொது - தனியார் கூட்டு வாயிலாக, 2,400 மெகா வாட் திறனில் ஆழியாறு நீரேற்று மின் நிலையம் அமைப்பதற்கு, தனியார் தேர்வு, மின் கொள்முதல் உள்ளிட்ட, 'டெண்டர்' விதிகளை உருவாக்கும் பணிக்கு ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளார். இதற்கு, தமிழக உள்கட்டமைப்பு வாரியம், 'டெண்டர்' கோரியுள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில், 14,500 மெகா வாட் திறனில், 15 நீரேற்று மின் திட்டங்களை, மின் வாரியம் அமைக்க உள்ளது. இத்திட்டங்களை பி.பி.பி., கூட்டு முயற்சியில் செயல்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ