உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  புதுக்கோட்டை டைடல் பார்க் பணிக்கு டெண்டர்

 புதுக்கோட்டை டைடல் பார்க் பணிக்கு டெண்டர்

சென்னை:தமிழகம் முழுதும் ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு, மாவட்டம் தோறும் டைடல் பார்க் கட்டடத்தை, தமிழக அரசு கட்டி வருகிறது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், 'நியோ டைடல் பார்க்' பெயரில் மினி டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின், இம்மாத துவக்கத்தில் அறிவித்தார். தற்போது, புதுக்கோட்டை டைடல் பார்க் கட்டட வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகரை நியமிக்க, டைடல் பார்க் நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது. அந்நிறுவனத்தின் வடிவமைப்புக்கு ஏற்ப, 50,000 - 60,000 சதுரடியில் டைடல் பார்க் கட்டப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்