உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜவுளி துறை பி.எல்.ஐ., திட்டம் டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம்

ஜவுளி துறை பி.எல்.ஐ., திட்டம் டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம்

புதுடில்லி:ஜவுளித் துறைக்கான பி.எல்.ஐ., அதாவது உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை டிசம்பர் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட விண்ணப்ப காலத்தில், செயற்கை இழை ஜவுளி, செயற்கை இழை துணிகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளின் கீழ் அதிகளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, காலக்கெடு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://pli.texmin.gov.in/ என்ற இணையதளத்தி ல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயற்கை இழை ஜவுளி, துணிகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்பை ஊக்குவிக்கும் விதமாக, 10,683 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளித்துறை பி.எல்.ஐ., திட்டம் கடந்த 2021 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தற்போது வரை 74 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை