தஞ்சை ஸ்டார்ட் அப் ரூ.2 கோடி நிதி திரட்டியது
சென்னை:தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த, 'வி சேப்' என்ற, ஸ்டார்ட்அப் நிறுவனம், 'ஸ்மார்ட்' பாதுகாப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 'ஸ்மார்ட் லாக்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குற்றங்கள் மற்றும் சொத்து இழப்புகளைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.துபாயைச் சேர்ந்த முதலீட்டாளரிடம் இருந்து, 2.57 கோடி ரூபாய் நிதியை, வி சேப் நிறுவனம் திரட்டியுள்ளது. இந்நிறுவனம், ஏற்கனவே தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனத்தின் 'டான்சீட்' எனப்படும் புத்தொழில் நிதி திட்டத்தின் கீழும் நிதியுதவி பெற்றுள்ளது.