உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாட்டின் மின்சார தேவை 7.50சதவிகிதம் வரை அதிகரிக்கும்

நாட்டின் மின்சார தேவை 7.50சதவிகிதம் வரை அதிகரிக்கும்

புதுடில்லி:நடப்பாண்டின் கோடை காலத்தில் இந்தியாவின் மின் தேவை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 6.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை அதிகரிக்கும் என, மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கிரிசில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவின் மின் தேவை, முந்தைய ஆண்டைவிட, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 6.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும் என, தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் கோடை வெப்பம் மற்றும் தொழில்துறை தேவை உயர்வால், ஒட்டுமொத்தமாக கடந்த 2025ம் நிதியாண்டில் மின் தேவை 4.30 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இது 2022 மற்றும் 2024ம் நிதியாண்டுகளுக்கு இடையில் 7.10 சதவீதம் கூட்டு ஆண்டு வளர்ச்சியுடன் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களில் கோடை வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், ஏ.சி.,களின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச்சில் மின் தேவை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 6.90 சதவீதம் அதிகரித்து, 148.5 பில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்திருந்தது.இவ்வாறு தெரிவித்து உள்ளது. 2024-25 மின் தேவை உயர்வு 4.30% 2025 மார்ச் மின் பயன்பாடு 6.90% உயர்வு 14,900 கோடி யூனிட்டுகள்ஏப்ரல் - ஜூன் தேவை 7.50% உயரும்**கணிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை