உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக பொருளாதாரம் கொரோனா காலத்தை விட மோசமாகலாம் டபுள்யு.இ.எப்., எச்சரிக்கை

உலக பொருளாதாரம் கொரோனா காலத்தை விட மோசமாகலாம் டபுள்யு.இ.எப்., எச்சரிக்கை

புதுடில்லி:உலக நாடுகள் சர்வதேச நிதி மற்றும் வர்த்தக கட்டமைப்பை துண்டாட நினைப்பதால், உலக பொருளா தாரத்துக்கு 490 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படக்கூடும் என, உலக பொருளாதார மன்றமான டபுள்யு.இ.எப்., தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2017 முதல் உலகளவில் பொருளாதாரத் தடைகள் விதிப்பது 370 சதவீதம் அதிகரித்துள்ளது. பல நாடுகளும், பொருளாதார தடைகள், தொழில்துறை கொள்கைகள் ஆகியவற்றை தங்களின் புவிசார் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அதிகமாக பயன்படுத்த துவங்கிஉள்ளன. இதனால் வர்த்தகம், அன்னிய முதலீடுகள் சரிந்து, பொருளாதார செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, உலகப் பொருளாதாரத்துக்கு 51 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 490 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம். இது கடந்த 2008ம் ஆண்டின் பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகியவை ஏற்படுத்திய இழப்பை காட்டிலும் அதிகமாக இருக்கும். இது ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தில் 5 சதவீதம். அதே நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளால் பணவீக்கம் 5 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த சூழல் இன்னும் மோசமடையும்பட்சத்தில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களே பெரிதும் பாதிக்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை