எண்கள் சொல்லும் செய்தி
97.15 கோடி
செப்., 30 நிலவரப்படி, நாட்டின் இன்டர்நெட் சந்தாதாரர்கள் எண்ணிக்கை இது. ஜூன் மாதத்தைவிட 0.20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், பிராட்பேண்டு இணைப்புகள், 94.44 கோடி. லேண்ட்லைன் தொலைபேசி, டி.டி.எச்., இணைப்புகள் குறைந்த நிலையில், இன்டர்நெட் இணைப்புகள் அதிகரித்ததாக டிராய் தகவல்.ரூ.9,750 கோடி
கடந்த ஆண்டு ஏப்ரல் - நவம்பரில், உலக நாடுகளுக்கு இந்தியாவின் காபி ஏற்றுமதி மதிப்பு இது. 2023ல் இதே காலத்தில் நடந்த 6,830 கோடி ஏற்றுமதியைவிட, இது 29 சதவீதம் அதிகம். காபி ஏற்றுமதி 1 பில்லியன் டாலரை தாண்டியது இதுவே முதல்முறை. பாரம்பரிய தேயிலை ஏற்றுமதி நாடான இந்தியா, காபி ஏற்றுமதியை யும் அதிகரித்து வருகிறது. ரூ.1.81 லட்சம் கோடி
கடந்த ஆண்டு ஏப்ரல் - அக்டோபரில் இந்திய ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி மதிப்பு இது. முந்தைய ஆண்டைவிட 7 சதவீதம் அதிகம். இதில், ரெடிமேடு ஆடைகள் ஏற்றுமதி 41%, பருத்தி ஆடைகள் பங்கு 33%. ஜவுளி, ஆடை இறக்குமதி 1 சதவீதம் குறைந்து உள்ளது. 15.86 சதவீதம்
டிசம்பர் 28 நிலவரப்படி, தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சரிந்த வருவாய் இது. செப்டம்பர் வரை புதிய உச்சம் கண்ட பங்குச் சந்தைகள், அக்டோபர் - டிசம்பரில் பெரும் வீழ்ச்சி கண்டதே இதற்கு காரணம். நிப்டி 3,000 புள்ளிகள் சரிவால், என்.பி.எஸ்., முதலீடுக்கு செப்டம்பரில் கிடைத்த 40 சதவீதம் லாபத்தில்இருந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.ரூ.40,000 கோடி
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்திக்கான சூழல் அமைப்பை உருவாக்க, நிதி தேவை என மத்திய அரசுக்கு இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் கோரிக்கை. 9.76 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 42.50 லட்சம் கோடி ரூபாயாக, உற்பத்தியை அதிகரிக்க அமைப்பு அவசியம் என வலியுறுத்தல்.