உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

2,00,00,000 டன்

கடந்த மாதம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட நாட்டின் எரிபொருள் தேவையின் வளர்ச்சி 2.10 சதவீதம் அதிகரித்து 2.07 கோடி டன்னாக இருந்தது. கடந்தாண்டு மே மாதத்துக்கு பிறகு, இதுவே அதிகபட்ச தேவையாகும். பெட்ரோல் தேவை 10.80 சதவீதம் அதிகரித்து 33.10 லட்சம் டன்னாகவும்; டீசல் தேவை 6 சதவீதம் அதிகரித்து, 81 லட்சம் டன்னாகவும் இருந்தது. சமையல் எரிவாயு தேவை 5.80 சதவீதம் உயர்ந்து 27.80 லட்சம் டன் ஆனது.

4,14,000 கோடி

வங்கிகள், நிதி நிறுவனங்கள் நுண்கடன் பிரிவின் கீழ் வழங்கிய கடன் தொகை, கடந்த செப்டம்பர் காலாண்டில் 4.14 லட்சம் கோடி ரூபாய். இதுகுறித்த தகவலை கடன் தகவல் வழங்கும் நிறுவனமான கிரிப் ஹை மார்க் வெளியிட்டுள்ளது.இது கடந்த ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4.30 சதவீதம் குறைவு. அதே நேரம் இந்த காலகட்டத்தில் வாராக்கடனின் அளவும் அதிகரித்துள்ளது. 1 - 30 நாட்கள் வரை திருப்பிச் செலுத்தாத கடனின் அளவு 2.10 சதவீதமாகவும்; 31 - 180 நாட்கள் வரை திருப்பிச் செலுத்தாத கடனின் அளவு 4.30 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை