மேலும் செய்திகள்
முதல் நாளிலேயே ச றுக்கிய ஐ.டி.சி., ஹோட்டல்ஸ்
30-Jan-2025
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகளில், முந்தைய ஆண்டோடு நிகர லாபம் 18 சதவீதம் அதிகரித்ததை தொடர்ந்து, நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, இந்நிறுவன பங்குகள் 6.30 சதவீதம் உயர்வு கண்டு, 8,250 ரூபாய் வரை சென்றது. முடிவில், 1.82 சதவீத உயர்வுடன், 7,899.30 ரூபாயுடன் நிறைவு செய்தது. 15 மாதங்களுக்கு பின்னர், பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்கு விலை, 8,000 ரூபாயை எட்டியது.4 மாதத்தில் 100% லாபம்
ஆன்லைனில் புதிய, பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை தொடர்பான சேவையை வழங்கி வரும் 'கார்டிரேடு' நிறுவனத்தின் பங்குகள், நேற்றைய வர்த்தக நேரத்தின் போது 14 சதவீதம் உயர்ந்து, புதிய உச்சமாக பங்கு ஒன்றின் விலை 1,765.20 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில், நிகர லாபமாக 45.33 கோடி ரூபாயை ஈட்டியதையடுத்து இந்நிறுவன பங்குகள் உயர்வு கண்டன. கடந்த அக்., 7ம் தேதி, 'கார்டிரேடு' பங்கு ஒன்றின் விலை 845.30 ரூபாய்க்கு விற்ற நிலையில், நான்கு மாதங்களில் 100 சதவீதம் உயர்ந்துள்ளது.சரிவில் டாடா மோட்டார்ஸ்
மோசமான மூன்றாம் காலாண்டு முடிவுகளால், டாடா மோட்டார்ஸ் பங்குகள் விலை நேற்றைய வர்த்தகத்தின் போது, 9 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு அதன் பங்கு ஒன்றின் விலை 684.25 ரூபாயாக குறைந்தது. கடந்த ஆறு மாதங்களில் இந்நிறுவன பங்கு, 40 சதவீதம் சரிவையும், நடப்பாண்டு மட்டும் சராசரியாக 7 சதவீதம் சரிவை கண்டுள்ளது. இதனால், டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 2.57 லட்சம் கோடி ரூபாயாக சுருங்கி உள்ளது.செபி கட்டுப்பாடு
சமூக வலைதளங்களில் பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான நேரடி தரவுகளை பயன்படுத்த, நிதித்துறை பிரபலங்களுக்கு 'செபி' புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, மூன்று மாதங்களுக்கு முந்தைய பங்கு தரவுகள் அடிப்படையில் மட்டுமே விளக்க வேண்டும், செபியின் அனுமதி பெறாமல் முதலீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்கக் கூடாது. மூன்று மாதங்களுக்கு பிந்தைய பங்குகளின் பெயர், குறியீடு அல்லது விலை தரவுகளை கணித்து, பரிந்துரைகளை அளிக்கக் கூடாது. மீறுவோருக்கு அபராதம், லைசென்ஸ் ரத்து செய்யப்படுமென எச்சரித்து உள்ளது.
30-Jan-2025