உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

26

சதவீதம் அளவுக்கு, கடந்தாண்டு இந்திய வன்பொருள் பொறியியல் துறைக்கான பெண்களின் விண்ணப்பங்கள், முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளன. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், பெண்களின் பங்கேற்பு சிறப்பான மாற்றத்தை குறிக்கிறது.

2.19

லட்சம் கோடி ரூபாய் நிகர வரவை, கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டுகள், கடந்த ஏப்ரலில் ஈர்த்துள்ளன. மார்ச் மாதத்தில் 2.02 லட்சம் கோடி ரூபாய் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, இந்த முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

4.24

லட்சம் டன் சர்க்கரையை நடப்பு 2024 - 25 சந்தைப்படுத்துதல் பருவத்தில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக, அகில இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 92,758 டன் சர்க்கரை, சோமாலியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

1,034

கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டர்களை, ஆர்.பி.ஜி., குழுமத்தின் கே.இ.சி., இன்டர்நேஷனல் நிறுவனம் பல வணிகப் பிரிவுகளில், பெற்றுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் செமிகண்டக்டர் பிரிவில் முதல்முறையாக நுழைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ