எண்கள் சொல்லும் செய்தி
13நடப்பு நிதியாண்டில் நாட்டின் மருந்து துறை 11 முதல் 13 சதவீத வருவாய் வளர்ச்சி காணும் என கிரிசில் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது1.41செப்., 18 நிலவரப்படி நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 1.41 லட்சம் கோடி ரூபாய் குறைந்து 72.76 லட்சம் ரூபாயாக உள்ளது. கடந்த 2024க்கு பின் மிகப்பெரிய வாராந்திர சரிவு இது35,000அமெரிக்காவின் வரி அழுத்தத்தால், ரஷ்யாவை தவிர்த்து, மற்ற நாடுகளிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டால், ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்12,000அசாமின் பாரம்பரிய சிறப்பு கட்டி தேயிலை விலை கிலோ 12,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது38,785செப்டம்பரில் இதுவரை 30 நிறுவனங்களின் ஐ.பி.ஓ., வாயிலாக 38,785 கோடி ரூபாய் திரட்டப்பட்டுஉள்ளது. 1996க்கு பின் இந்த மாதத்தில் தான் அதிக ஐ.பி.ஓ.,க்கள் வெளியாகின.