உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பூந்தமல்லி மிக அருகில் உருவாகும் புதிய சென்னை: ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் கனவு குடியிருப்புகள்

பூந்தமல்லி மிக அருகில் உருவாகும் புதிய சென்னை: ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் கனவு குடியிருப்புகள்

ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் லிமிடெட் நிறுவனம் தென்னிந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு முக்கிய நிறுவனமாக திகழ்கிறது. பூந்தமல்லிக்கு மிக அருகில் 'புதிய சென்னை' என்ற குறிப்பு பெயரில் புதிய குடியிருப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.பல்வேறு மாற்றங்களை கண்டு வரும் சென்னையின் ரியல் எஸ்டேட் நிலப்பரப்பில், வீடுவாங்குபவர்கள் வழக்கமான வீட்டு வசதிகளுடன், நவீன வசதிகள் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் சுற்றுபுறங்களையும் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்காகவே ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் நிறுவனம் பூந்தமல்லிக்கு மிக அருகில் பல்வேறு வசதிகளுடன் குடியிருப்புகளை அறிமுகப்படுத்துகிறது.'புதிய சென்னை'யில் (குறிப்புபெயர்) கட்டப்பட்டு வரும் இந்த குடியிருப்புகள், 2 மற்றும் 3 படுக்கையறைகள் கொண்ட வீடுகள், நீச்சல்குளம், உடற்பயிற்சிகூடம், ஜாகிங்டிராக் போன்ற பல்வேறு வசதிகளுடன் முழு வாழ்க்கை அனுபவங்களையும் கொண்டதாக உள்ளன.

அனைத்து வாழ்க்கை முறைகளுக்கும் ஒப்பற்ற இணைப்பு

'புதிய சென்னை' (குறிப்புபெயர்) குடியிருப்புக்கு அருகில் விரைவில் மெட்ரோ ரெயில், குத்தம்பாக்கம் பேருந்துநிலையம் மற்றும் காய்கறி மார்க்கெட் சேவைகள் வரவிருக்கின்றன. இவ்விடத்திற்கு மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து 10 நிமிடங்களிலும், சென்னை புதிய மொபசல் பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடங்களிலும், சென்னை - பெங்களூரு விரைவுச் சாலையிலிருந்து 5 நிமிடங்களிலும் வந்துவிடலாம். சென்னை அருகில் விரைவில் அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்தில் இருந்து 40 நிமிடங்கள், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழில்துறை மையத்தில் இருந்து 10 நிமிடங்கள், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 25 நிமிடங்கள் மற்றும் போரூர் ஐடி பூங்காவிலிருந்து 30 நிமிடங்களில் வந்து சேரும் வகையில் முக்கிய இடங்களுக்கு மையாக இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளது.அரசின் தொழில் முன்னேற்ற முயற்சிகளால் மிகவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மேற்கு சென்னையில் அமைந்துள்ள இந்த 'புதிய சென்னை' (குறிப்புபெயர்) குடியிருப்புகளில் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை விரைவில் சென்றடையலாம். இதன்மூலம் உங்களது முதலீடு குறுகிய காலத்தில் மூன்று மடங்கு வரை மதிப்பு வளர்ச்சியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ப்ராஜெக்ட் பற்றிய விளக்க வீடியோவை இங்கே காணுங்கள் : https://www.youtube.com/embed/fB3uZp_UFlA


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி