உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க மத்திய வங்கி கடன் வட்டியை குறைத்தது

அமெரிக்க மத்திய வங்கி கடன் வட்டியை குறைத்தது

அமெரிக்காவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனின் வட்டியை, அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் 0.25 சதவீதம் குறைத்துள்ளது. அமெரிக்க நிதிக் கொள்கைக்கான 'பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி'யின் இரண்டு நாள் கூட்டத்துக்குப் பிறகு வட்டி குறைப்பை, பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் அறிவித்தார். இதையடுத்து, கடன் வட்டி, 4.50 சதவீதமாகியுள்ளது. அமெரிக்க பணவீக்கம், பெடரல் வங்கியின் இலக்கைவிட குறைந்து 2 சதவீதமானதால், கடன் வட்டி மீண்டும் குறைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் மாதத்தில் கடன் வட்டியை 0.50 சதவீதம் குறைத்த நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற இரண்டாம் நாளில் வட்டி மேலும் குறைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி