உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துாத்துக்குடியில் அமைகிறது முதல் கடலோர காற்றாலை

துாத்துக்குடியில் அமைகிறது முதல் கடலோர காற்றாலை

தூத்துக்குடி: இந்தியாவின் முதல் கடலோர காற்றாலை மாதிரி திட்டம், துாத்துக்குடி கடற்பகுதியில் 77 கோடி ரூபாய் செலவில் 6.25 மெகாவாட் திறனுடன் அமைக்கப்பட உள்ளது. துாத்துக்குடி உள் துறைமுகத்தின் தெற்கு பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 1,650 மீட்டர் தொலைவில் இந்த காற்றாலை நிறுவப்பட உள்ளது. இத்திட்டத்துக்கான டெண்டரை ‘இந்தியன் போர்ட் ரயில் அண்டு ரோப்வே கார்ப்பரேஷன்’ நிறுவனம் கோரியுள்ளது. இத்திட்டத்தின் வடிவமைப்பு, கொள்முதல், கட்டுமானம், நிறுவுதல், பரிசோதனை மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான பராமரிப்பு பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இந்த ஆலையில் உற்பத்தியாகும் மின்சாரம் மாநில மின் தொகுப்பில் இணைக்கப்படும் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !