டிட்கோ ராணுவ தளவாட உற்பத்தி பூங்கா
சென்னை:கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, வாரப்பட்டியில், 372 ஏக்கரில் தமிழக அரசின், தொழில் வளர்ச்சி நிறுவனம், ராணுவ உபகரண உற்பத்தி தொழில் பூங்கா அமைக்கிறது. அங்கு, 260 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் பூங்காவில் உள்ள தொழில்மனைகள், வான்வெளி மற்றும் ராணுவத்துக்கு தேவைப்படும் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தற்போது, இந்த பூங்காவுக்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துஉள்ளது.