உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தீபாவளிக்கு தயாராகும் திருப்பூர் ஆர்டர்கள் வரத் துவங்கின

தீபாவளிக்கு தயாராகும் திருப்பூர் ஆர்டர்கள் வரத் துவங்கின

திருப்பூர்:தீபாவளி பண்டிகைக்கால ஆர்டர் மீதான வர்த்தக விசாரணை துவங்கியுள்ளதால், உற்பத்தியை துவக்க திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். நாட்டின் பின்னலாடை தலைநகரான திருப்பூரில், ஆண்டுக்கு, 30,000 கோடி ரூபாய் அளவுக்கு, உள்நாட்டு வர்த்தகம் நடக்கிறது. பருத்தி நுாலிழை ஆடைகள், பின்னலாடைகள் மற்றும் உள்ளாடைகள், நாடு முழுதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆண்டு முழுதும் வர்த்தகம் நடந்தாலும், மொத்த வர்த்தகத்தில், 40 சதவீத பங்களிப்புடன் தீபாவளி வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கடந்த தீபாவளி பண்டிகையின் போது, எதிர்பாராத வகையில் அதிக ஆர்டர்கள் குவிந்தன; வர்த்தகமும் நிறைவாக இருந்தது. அதேபோல், வரும் தீபாவளி பண்டிகைக்கால ஆர்டர் விசாரணை தற்போதே துவங்கிவிட்டது. தீபாவளி பண்டிகை, நாடு முழுதும் விமரிசையாக கொண்டாடப்படுவதால், அனைத்து மாநில வியாபாரிகள், திருப்பூரில் வர்த்தக விசாரணையை துவங்கியுள்ளனர். தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா துணைத்தலைவர் பாலச்சந்தர் கூறுகையில், ''தீபாவளி பண்டிகை விற்பனை தான், திருப்பூரில் பிரதானமாக இருக்கும். பண்டிகை காலத்தில் 10,000 முதல் 12,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும். தமிழகத்தில் அக்., 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது; அக்., 10ம் தேதிக்குள், ஆடைகள், உள்ளாடைகள் விற்பனைக்கு சென்று சேர வேண்டும்'' என்றார். பண்டிகை காலத்தில் 10,000 முதல் 12,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ