மேலும் செய்திகள்
எண்கள்சொல்லும் செய்தி
22-Jun-2025
புதுடில்லி: இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த ஜூனில் 1.59 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக, மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூன் மாத வர்த்தகப் பற்றாக்குறை 1.89 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், 1.59 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய மே மாதத்தில் 1.86 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, கடந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இருந்த 1.20 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.ஏற்றுமதி சரிவு * பெட்ரோலியம் * துணிகள்* ரத்தினங்கள், நகைகள் * தோல் * இரும்பு தாதுக்கள்* எண்ணெய் வித்துக்கள்* முந்திரி* மசாலாப்பொருட்கள்* புகையிலை * காபி ஏற்றுமதி வளர்ச்சி* பொறியியல் பொருள்* தேயிலை* அரிசி* ஆயத்த ஆடைகள் * ரசாயனங்கள் * கடல் பொருட்கள்* மருந்துhttps://x.com/dinamalarweb/status/1945286852715667922ஜூன் மாதம் ஏற்றுமதி இறக்குமதி (ரூ. லட்சம் கோடியில்)* சரக்குகள் 2.99 4.58 * பற்றாக்குறை 1.59 * சேவைகள் 2.79 1.49 * உபரி 1.30பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக, கடந்த மாதம் ஜூனில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 14 சதவீதம் குறைந்து 13,855 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 16,150 கோடி ரூபாயாக இருந்தது. மறுபுறம், தங்கத்தின் விலை அதிகரிப்பால், தேவை குறைந்ததின் காரணமாக, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் இறக்குமதி 3 சதவீதம் குறைந்து, 13,175 கோடி ரூபாயாக இருந்தது.
22-Jun-2025