உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளி

வர்த்தக துளி

ஸ்ரீஆனந்தாஸ் ஸ்வீட்சில் ரூ.175 கோடி முதலீடு கோயம்புத்துாரைச் சேர்ந்த ஸ்ரீஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 'ஏ91 பார்ட்னர்ஸ்' 175 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி வணிக நிறுவனமான ஸ்ரீஆனந்தாஸ், கடந்த 1998ல் கோவையில் உணவகமாக துவக்கப்பட்டு, பின் 2017லிருந்து இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலையும் மேற்கொண்டு வருகிறது-. தற்போது கோவையில் 19 விற்பனை நிலையங்களுடன் இயங்கி வருகிறது. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுடன், ஆந்திரா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் தன் வணிகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ