உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

டாடா -- கருடா ஏரோஸ்பேஸ் கூட்டுபெங்களூரில் நடைபெற்று வரும் 'ஏரோ இந்தியா 2025' கண்காட்சியில், உள்நாட்டில் ஆளில்லா விமானத்திற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவது தொடர்பாக, டாடா எலெக்ஸி, கருடா ஏரோஸ்பேஸ் உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ராணுவம், விவசாயம் மற்றும் ஸ்மார்ட் நகரங்களுக்கு ஏற்ற வகையில், உள்நாட்டில் ட்ரோன் தயாரிப்பு, சென்சார் தயாரிப்பு மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பம் அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. டாடா எலெக்ஸி நிறுவனம், இதற்கான வடிவமைப்பு, இன்ஜினியரிங் மற்றும் சோதனை, சான்றிதழ் உள்ளிட்டவற்றை கவனிக்கும். ட்ரோன் தயாரிப்பு, விற்பனை தொடர்பான பணிகளை கருடா ஏரோஸ்பேஸ் கவனிக்கும். 'நிஸானை வாங்க திட்டமில்லை'நிதி நெருக்கடியில் தவித்து வரும் ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனத்தை கைப்பற்றும் திட்டமில்லை என, பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஹோண்டா நிறுவனத்துடன் இணைவது தொடர்பாக நிஸான் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவிய நிலையில், தைவானின் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு கூறுகையில், ''நிசான் நிறுவனத்தை கைப்பற்றும் திட்டமில்லை. நிஸான் பங்குகளை வாங்குவது எங்கள் நோக்கமல்ல. எங்கள் நோக்கம், இணைந்து ஒன்றாக பணியாற்றுவது தான்,'' என தெரிவித்து உள்ளார்.பில்லியன் டாலர் பிராண்டானது மாஸாகடந்த 2024ம் ஆண்டுக்கான பில்லியன் டாலர் பிராண்டு பட்டியலில், கோக கோலா நிறுவனத்தின் 'மாஸா' குளிர்பானம் இடம்பிடித்துள்ளது. உலகளவில் கோக கோலா நிறுவனத்தின் 30வது பில்லியன் டாலர் பிராண்டு இதுவாகும். இந்தியாவில் இருந்து தம்ப்ஸ் அப் பானத்துக்கு பின், இரண்டாவது இந்திய பிராண்டாக மாஸா இந்த பட்டியலில் இணைந்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கோக கோலாவின் ஐந்தாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை