உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

அதிகரிப்பு

கடந்த மார்ச் மாத நிலவரப்படி, உலக நாடுகளின் மொத்த கடன், 324 டிரில்லியன் அதாவது 27,540 லட்சம் கோடியை கடந்துள்ளதாக ஐ.ஐ.எப்., எனும் சர்வதேச நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் உலக நாடுகளின் கடன் கிட்டத்தட்ட 638 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துஉள்ளது. சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளே இதற்கு முக்கிய காரணமாக விளங்கியுள்ளன. அதே நேரத்தில் கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் கடன் குறைந்துஉள்ளது. சீனா, தவிர்த்து, இந்தியா, பிரேசில், போலந்து ஆகிய வளர்ந்து வரும் நாடுகளின் கடன்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெடரல் வங்கி உயர்த்துகிறது

.ஏ.டி.எம்., பயன்பாட்டு கட்டணம், லாக்கர் வாடகை, கணக்கு பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை அடுத்த மாதம் முதல் உயர்த்த உள்ளதாக, பெடரல் வங்கி அறிவித்துள்ளது.பெடரல் வங்கி ஏ.டி.எம்.,களில் அதன் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. வழக்கம் போல மாதத்துக்கு ஐந்து முறை பிற வங்கி ஏ.டி.எம்.,களை இலவசமாக பயன்படுத்தலாம். இதன் பின், பணம் எடுப்பதற்கு 23 ரூபாயும்; இருப்பை அறிந்துகொள்வது உள்ளிட்ட சேவைகளுக்கு 12 ரூபாயும் வசூலிக்கப்படும். போதிய இருப்பு இல்லாத காரணத்தால் ரத்தாகும் பரிவர்த்தனைகளுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். வெவ்வேறு கணக்குகளுக்கு ஏற்றாற் போல குறைந்தபட்ச இருப்பு பராமரிப்பு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில், அதிகபட்சமாக 375 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ