உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

அரிய வகை காந்தங்கள் ஆஸி.,யில் இருந்து இறக்குமதி

ஆஸ்திரேலியாவில் இருந்து அரிய வகை காந்தங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, நேற்றைய வர்த்தகத்தின்போது மாருதி முதல் ஐச்சர் மோட்டார்ஸ் வரை வாகனத்துறை பங்குகள் உயர்ந்து, நிப்டி ஆட்டோ குறியீடு 2 சதவீதம் உயர்வு கண்டன. அரிய வகை காந்தங்கள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்ததால், அதற்கு மாற்றாக அர்ஜென்டினா, பிரேசில், சிலி நாடுகளில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க இந்தியா முயற்சித்து வருகிறது.

டெய்ரி குயின் பிராண்டுஇந்தியாவில் நுழைகிறது

அமெரிக்காவைச் சேர்ந்த துரித உணவு பிராண்டான டெய்ரி குயினை, இந்தியாவில் தேவ்யானி இன்டர்நேஷனல் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, கே.எப்.சி., பீட்ஸா ஹட் மற்றும் கோஸ்டா காபி ஆகியவற்றை இந்தியாவில் இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது. கடந்த 1997ல் டெய்ரி குயினை, அமெரிக்க பெரு முதலீட்டாளரான வாரன் பபெட்டுக்கு சொந்தமான பெர்க்ஷையர் ஹாத்வே கையகப்படுத்தியதில் இருந்து, இதன் மதிப்பு பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

உ.பி., நிறுவனத்துடன்ஒன்பிளஸ் கைகோர்ப்பு

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வயர்லெஸ் இயர்போன் உள்ளிட்ட தயாரிப்புகளை மேற்கொள்ள, சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், உ.பி.,யின் நொய்டாவை சேர்ந்த ஆப்டிமஸ் எலக்ட்ரானிக்ஸ் உடன் கைகோர்த்துள்ளது. இதன்படி, முதற்கட்டமாக, இந்தியாவில் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் 3 இயர்போன் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இதனால், செலவுகள் குறைவதுடன், சீரான வினியோகம் இருக்கும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை