உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தலைவராக அஜய் சேத் நியமனம்

ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய காப்பீடு ஆணையத்தின் தலைவராக, முன்னாள் நிதித்துறை செயலர் அஜய் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, அஜய் சேத் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது, இவற்றில் எது முன்னர் வருகிறதோ, அது வரை பதவியில் நீடிப்பார். பொருளாதார கொள்கை முடிவெடுப்பதில் நீண்ட அனுபவம் மிக்க இவர், ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அமைப்பின் தலைவராக நியமிக்கப்படும் ஆறாவது ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார்.

அரசின் கையிருப்பில் இருந்து கோதுமை விற்க அவசியமில்லை

வெளிச்சந்தையில் போதிய வினியோகத்துடன், விலையும் சீராக இருப்பதால், அரசின் கையிருப்பில் உள்ள கோதுமையை சந்தையில் விற்க வேண்டிய தேவை எழவில்லை என, மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்து உள்ளார். கோதுமையின் தேவை சீராகவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், திறந்த சந்தை விற்பனை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பி.வி.சி., குழாய் விற்பனை நடப்பாண்டில் அதிகரிக்கும்

நடப்பு நிதியாண்டில் பி.வி.சி., குழாய்கள், இணைப்புகள் விற்பனை மீண்டெழும் என, கடன் மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் ரேட்டிங்ஸ் தெரிவித்து உள்ளது. கடந்த நிதியாண்டில் இப்பிரிவு வருவாய் வளர்ச்சி சரிவை கண்டது. ஆனால், மத்திய அரசின் ஜல் ஜீவன் , பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களால், பி.வி.சி.,குழாய் மற்றும் இணைப்புகளுக்கான தேவை தற்போது அதிகரித்து உள்ளது. பட்ஜெட்டிலும் மத்திய அரசு, முந்தைய திட்டங்களுக்கு இரு மடங்குக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால், விற்பனை அதிகரிக்குமென பி.வி.சி., குழாய் தயாரிப்பு நிறுவனங்கள் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி