மேலும் செய்திகள்
உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு வழிகாட்டுகிறது அபெடா
23 hour(s) ago
சாட்காம் சேவை விரைவில் துவங்கும்
23 hour(s) ago
'பா ராமவுன்ட் ஹெல்த் சர்வீசஸ் அண்டு இன்சூரன்ஸ் டி.பி.ஏ.,' நிறுவனம், 'மெடி அசிஸ்டு இன்சூரன்ஸ் டி.பி.ஏ.,' நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது. 'மெடி அசிஸ்டு ஹெல்த்கேர் சர்வீசஸ்' நிறுவனத்தின் கீழ் இயங்கும் இவை இரண்டும், காப்பீடு நிறுவனங்களுக்கு மருத்துவ மேலாண்மை சேவைகளை வழங்கி வருகின்றன. இதுவரை மெடி அசிஸ்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வந்த பாராமவுன்ட் ஹெல்த் சர்வீசஸை இணைக்க இயக்குநர் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கையில் எந்த பணமும் கைமாறாது எனவும், பங்குகளைக் கொடுத்து நிறுவனம் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் யூத் பங்குரூ.135 கோடிக்கு விற்றது பிளிப்கார்ட்
'அ ரவிந்த் யூத் பிராண்ட்ஸ்' நிறுவனத்தில், 'பிளிப்கார்ட்' வைத்துள்ள 31.25 சதவீத பங்குகளை, 135 கோடி ரூபாய்க்கு 'அரவிந்த் பேஷன்ஸ்' நிறுவனம் வாங்கி உள்ளது. 'பிளையிங் மெஷின்' என்ற பிராண்டு பெயரில் ஆடை மற்றும் அணிகலன்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் அரவிந்த் யூத் பிராண்ட்ஸ், கடந்த நிதியாண்டில் 432.16 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டியுள்ளது. இந்த நிறுவனத்தில் பிளிப்கார்ட் வசம் இருந்த பங்கு களை முழுமையாக திரும்பி வாங்கியதன் வாயிலாக, அரவிந்த் யூத் பிராண்ட்ஸ் அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமாக மாறி உள்ளது.
23 hour(s) ago
23 hour(s) ago