மேலும் செய்திகள்
ரூ.6.96 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
12-Mar-2025
அரூர்:அரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாளை முதல் மஞ்சள் ஏலம் துவக்கப்படுகிறது.தர்மபுரி மாவட்டம், அரூர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் சார்பில் வெளியிட்டு உள்ள அறிக்கை:அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நடப்பாண்டுக்கான மஞ்சள் ஏலம், நாளை காலை 11:00 மணிக்கு துவங்குகிறது. இங்கு விற்பனையாகும் மஞ்சளுக்கு, விவசாயிகளிடம் இருந்து கமிஷன் எதுவும் வசூலிக்கப் படாது.அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். ஏலத்தில், விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை கிடக்கவில்லை என்றால், 15 நாட்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமலும், அதன்பின், நாள் ஒன்றுக்கு குவின்டாலுக்கு, 25 காசு வீதம் செலுத்தி, கிடங்கில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். சந்தை மதிப்பில், 50 சதவீதம் வரை ஆண்டுக்கு, 5 சதவீத வட்டியில் பொருளீட்டு கடனாகவும் பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பான விபரங்களுக்கு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், விற்பனை கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
12-Mar-2025