உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / துாத்துக்குடி விண்வெளி பொது மையம் நிறுவனங்கள் திட்ட அறிக்கை தயாரிப்பு

துாத்துக்குடி விண்வெளி பொது மையம் நிறுவனங்கள் திட்ட அறிக்கை தயாரிப்பு

சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தில், விண்வெளி துறையை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக, 150 கோடி ரூபாயில் பொது வசதி மையம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு, 'ஆர்டெலியா' மற்றும் பி.டபிள்யு.சி., தனியார் நிறுவனங்களை, தமிழக அரசின், 'டிட்கோ' நியமித்துள்ளது. விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, குலசேகரன்பட்டினம் அருகில் விண்வெளி தொழில் பூங்காவை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்க உள்ளது. அங்கு, தொழில் துவங்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் வடிவமைப்பு, சோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, 150 கோடி ரூபாயில் பொது தொழில்நுட்ப வசதி மையத்தை, டிட்கோ அமைக்க உள்ளது. இதில், 100 கோடி ரூபாயை மத்திய அரசின், 'இன்ஸ்பேஸ்' வழங்குகிறது. பொது சேவை மையத்தில் இடம்பெற வேண்டியவை தொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்கும் பணிக்கு, கடந்த ஜூலையில், 'டெண்டர்' வெளியிடப்பட்டது. அதில், 'ஆர்டெலியா' மற்றும் பி.டபிள்யு.சி., என்ற தனியார் நிறுவனம் தேர்வாகிஉள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை