உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அரிய வகை கனிமங்கள் மறுசுழற்சி ரூ.1,500 கோடியில் ஊக்கத்தொகை மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிய வகை கனிமங்கள் மறுசுழற்சி ரூ.1,500 கோடியில் ஊக்கத்தொகை மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி:நாட்டின் அரிய வகை கனிமங்கள் சுத்திகரிப்பு திறனை மேம்படுத்தும் விதமாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய அரிய வகை கனிமங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக, இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மின்னணு கழிவுகள், பேட்டரிகளுக்கான மறுசுழற்சி வசதிகள் அமைக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். நடப்பு 2025 - 26 முதல் 2030 - 31 வரை ஆறு நிதியாண்டுகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதிகபட்சம் ரூ.50 கோடி மின்னணு கழிவுகள், பழைய லித்தியம் அயன் பேட்டரி மற்றும் வாகனங்களின் நச்சு வாயுகளைக் குறைக்கும் கேடலிட்டிக் கன்வர்டர்களின் மறுசுழற்சி குறித்து கவனம் செலுத்தப்படும். பெரிய நிறுவனங்கள் மட்டு மல்லாது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மொத்த ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு ஸ்டார்ட்அப் உள்ளிட்ட சிறிய நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 50 கோடி ரூபாயும்; சிறிய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 25 கோடி ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும். செயல்பாட்டு செலவின மானியத்தை பொறுத்தவரை முறையே 10 கோடி ரூபாயும்; 5 கோடி ரூபாயும் வழங்கப்படும். இதுவும் மொத்த உதவித்தொகையின் ஒரு அங்கமாகும். கட்டமைப்பு குறிப்பிட்ட காலத்துக்குள் உற்பத்தியை துவங்கும் நிறுவனங்களுக்கு, ஆலை அமைக்க, இயந்திரங்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்க மூலதன செலவின மானியமாக 20 சதவீதம் வழங்கப்படும். காலதாமதமானால், இந்த உதவித்தொகை குறைக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக, ஆண்டுக்கு 270 கிலோ டன் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, 40 கிலோ டன் அரிய வகை கனிமங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல 8,000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்படும் என்றும், 70,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 270 கிலோ டன் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, 40 கிலோ டன் அரிய வகை கனிமங்கள் கிடைக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை