உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வேதாந்தாவுக்கு ரூ.102 கோடி அபராதம்

வேதாந்தாவுக்கு ரூ.102 கோடி அபராதம்

புதுடில்லி:'வேதாந்தா' நிறுவனத்துக்கு சுங்கத் துறையினர் 102 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பாக, நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்கூட்டியே பெற்ற அங்கீகாரம் தொடர்பாக, அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மொத்தம் 102.04 கோடி ரூபாய் அபராதமும், அது போக சுங்க வரி மற்றும் வட்டி செலுத்துமாறு, தூத்துக்குடி சுங்க ஆணையரிடம் இருந்து நோட்டீஸ் பெறப்பட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, நிறுவனத்தின் நிதி நிலையில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் வேதாந்தா தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !