உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டாப் கியரில் வாகன ஏற்றுமதி

டாப் கியரில் வாகன ஏற்றுமதி

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவிலிருந்து கார், வேன் உள்ளிட்ட பயணியர் வாகன ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வாகன உற்பத்தியாளர்கள் சங்கமான 'சியாம்' தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஏப்., முதல் செப்., வரையிலான மாதங்களில், மொத்தம் 4.45 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்து, 40 சதவீத வளர்ச்சியுடன் மாருதி சுசூகி முதலிடத்தில் உள்ளது. ஹூண்டாய் மோட்டார், நிசான், போக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட உலக சந்தைகளில் நிலவும் நிலையான தேவை காரணமாகவே, இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி குறைந்தபோதும், வேறு 24 நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி